பாலிடெக்னிக் தேர்வு நவ.12-ம் தேதி தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/10/2024

பாலிடெக்னிக் தேர்வு நவ.12-ம் தேதி தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு

 

 

1326996

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவரும், தொழில்நுட்ப கல்வி ஆணையருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிவரை தொடர்ந்து (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.


செய்முறை தேர்வுகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள்முன்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு பணிகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459