TNPSC Group 4 Exam 2024 Vacancy அதிகரிக்க வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




10/09/2024

TNPSC Group 4 Exam 2024 Vacancy அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இப்பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது, தேர்வின் மூலம்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், குரூப் 4 மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2024 : 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் 28.02.2024 வரை பெறப்பட்டது. 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 20 லட்சத்து 36,774 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 7,247 தேர்வு மையங்களில் 15.88 லட்சம் பேர் தேர்வை எழுதினர். 

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறை : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறை : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத தகுதியானவர்கள் ஆவார்கள். 200 கேள்விகள் கொண்டு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாக உள்ளது. ஓஎம்ஆர் தாளில் தேர்வு நடைபெறும். இந்தாண்டு புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.

 TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் : டிஎன்பிஎஸ்சி-யின் குரூப் 4 அறிவிப்பின் படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். தொடர்ந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இருக்கும் கால தாமதத்தை குறைப்போம் என உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு : காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு : இந்நிலையில், குரூப் 4 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், காலிப்பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2022-ம் ஆண்டு நடத்த குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் 7,301-இல் இருந்து 10,117 வரை அதிகரிக்கப்பட்டது. மேலும், தற்போது இன்னும் 18 மாதங்களில் அரசு துறைகளில் 75,000 இடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தெரிவித்தார். அதில் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டும் சுமார் 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். 10 ஆயிரம் மேல் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு : 10 ஆயிரம் மேல் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி-யின் கடைசி தேர்வு அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தாண்டு குரூப் 5 தேர்வை தவிர இதர தேர்வுகளுக்கான அறிவிப்பு நிறைவடைந்தது. அதிகளவில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கூடிய தேர்வாக குரூப் 4 தேர்வு உள்ளது. இத்தேர்வை 15.88 பேர் எழுதியுள்ளனர் என்பதால், காலிப்பணியிடங்களை அதிகரித்தாலும் தேர்வு செய்ய ஆட்கள் உள்ளனர். இந்த காரணங்களினால், குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே வெளியாகும்


முடிவுகள், பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசு பணியின் சேர வேண்டும் என பல நாட்களாக தங்களை தயார் படுத்திக்கொண்டு தேர்வுகளை எதிர்கொண்ட வருகின்றனர். வரும் காலங்களில் அவர்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459