மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது? நீதிமன்றம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/09/2024

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது? நீதிமன்றம் கேள்வி

 மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல்ப டுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை கேள்வி எழுப் பியது.


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி. பூபேஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு:


ராமநாதபுரம் நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால், ராமநாதபுரம், இதைச் சுற்றிய யுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சிரமப்படுகின் றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ராமநாதபுரத் தில் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில், அரசு மேல்நி லைப் பள்ளி தொடங்க வேண் டும் என மனு அளித்தேன். இதற்கு அவர்,ராமநாதபுரம்வள் ளல் பாரியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நி லைப் பள்ளியாகத் தரம் உயர்த்த பள்ளிக் கல்வித் துறைக்கு கருத் துரு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி நிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என நான் கோரி னேன் . ஆனால், உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவ தாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதிலளிக்கிறார்.


எனவே, ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.


இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு, ராமநா தபுரத்தில் அரசு உதவி பெறும் இரு பாலர், மாணவர்கள் படிக் கும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதிலளிக்க உத் தரவிட்டது.


இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணி யன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ராமநாதபுரம் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அளித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட் டது. இதில், ஓர் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு அரசு உதவி பெறும் இருபாலர் மேல்நிலைப் பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளதாக அதில் குறிப்பி டப்பட்டிருந்தது.


இதற்கு மனுதாரர் தரப்பில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மருத் துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீ தம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவ தாகத் தெரிவிக்கப்பட்டது.


இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

அரசுப் பள்ளிகளில் படித்த


மாணவர்களுக்கு மட்டுமே மருத் துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து வட்ட தலை மையிடங்களில் அல்லது குறைந் தபட்சமாக மாவட்ட தலைமை இடங்களிலாவது அரசு மேல்நி லைப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். இல்லையெனில், மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கும் தனி இட ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது.


இதுகுறித்து தமிழக பள்ளிக் கல் வித் துறைச் செயலர் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை அக். 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர் நீதி பதிகள்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459