தரவரிசை பட்டியல் வெளியானது: பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/09/2024

தரவரிசை பட்டியல் வெளியானது: பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம்

 

 

1307684

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இணையவழி துணைகலந்தாய்வு நேற்று தொடங்கியது.


நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான 3 சுற்று கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது. இதன்மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 31 இடங்கள் நிரம்பின. இன்னும் 70,403 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள், பிளஸ்2 துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களைக் கொண்டுநிரப்பப்படும் என்றும் இதற்காகதுணை கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, துணைகலந்தாய்வுக்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு ஆகஸ்ட்28-ம் தேதி தொடங்கி கடந்த4-ம் தேதி முடிவடைந்தது. கல்வி பிரிவில் 12 ஆயிரத்து39 பேரும், தொழிற்கல்வி பிரிவில்274 பேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதஉள்ஒதுக்கீட்டில் கல்வி பிரிவின்கீழ் 4,432 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 69 பேரும் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்விபிரிவில் 11,511 பேரும் தொழிற்கல்வி பிரிவில் 258 பேரும், 7.5சதவீத உள்ஒதுக்கீட்டில் கல்விபிரிவில் 3736 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 47 பேரும்தகுதிபெற்றனர்.


8-ம் தேதி நிறைவு: இந்நிலையில், அவர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு இணையவழி கலந்தாய்வும் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யஉரிய காலஅவகாசம் அளிக்கப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்தவர்களுக்கு கல்லூரிஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். துணை கலந்தாய்வு8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்சி - அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459