எட்டயபுரம். செப். 20: விடுமுறையில் கண்மாயில் குளிக்கச் சென்ற மாண வர்களை அடித்த விவகா ரத்தில் மேலநம்பிபுரம் அரசு பள்ளி ஆசிரியர் சஸ் பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட் டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
TEACHERS NEWS |
இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பள்ளி ஆசி ரியர் ராதாகிருஷ்ணன், கண்மாய்க்கு குளிக்கச் சென்ற மாணவர்களை அடித்ததாக கூறப்ப டுகிறது. இதையறிந்த அவர்களின் பெற்றோர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார்தெரி வித்தனர். இதன் அடிப்ப டையில் மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இப்பிரச்னை குறித்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ராதிகா கூறு கையில், பெற்றோருடன் கண்மாய்க்கு குளிக்கச் சென்ற எனது குழந்தை கள் உள்பட 7 மாணவர் களை ஆசிரியர் ராதா கிருஷ்ணன் தாக்கியுள் ளார். அவரை பணியிட மாற்றம் செய்ய வேண் டும். பள்ளியில் நிரந்தர மாக தலைமை ஆசிரியர் இல்லை, இது குறித்து பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என் றார்.
இதுகுறித்து ஆசிரியர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ஒரு ஆசி ரியராகஎனது கடமையை தான் செய்தேன் விடுமுறை தினங்களில் கண்மாயில் குளிக்க சென்ற மாண வர்கள் ஒருவரை ஒருவர் அமுக்கி விளையாடியதாக கூறினர் எனவே மாணவர் களுக்கு ஏதாவது விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் நலன் கருதி அடித்து அவ் வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தினேன் என்றார்.
இதனிடையே ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணி யிடை நீக்கம் செய்து தூத்துக் குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாயகம் உத்தரவிட்டு உள்ளார். ஆசிரியர் ராதாகிருஷ்ணன். பள்ளி தலைமை ஆசிரிய ராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment