டிட்டோஜாக் கூட்ட மைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த 10-ம் தேதி ஈடு பட்டனர். தொடர்ந்து இந்த அமைப் பின் ஆசிரியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 30 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இது குறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தலைமைச் செயலகத்தை அதைத் முற்றுகையிடும் போராட்டம் வரும் 30-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்புயிட்டுள்ளது. இதையடுத்து டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சென்னையில் இன்று (செப்டம்பர் 23) காலை 9.15 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எனவே, டிட்டோஜேக் அமைப்பில் இடம் பெற்றுள்ள சங்கங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதி இந்த கூட்டத் தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment