ஆசிரியர்களின் சுயமரியாதையை சீண்டாதீங்க அரசுக்கு எதிராக சங்கங்கள் கொந்தளிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




23/09/2024

ஆசிரியர்களின் சுயமரியாதையை சீண்டாதீங்க அரசுக்கு எதிராக சங்கங்கள் கொந்தளிப்பு

 நடவாடிக்கை என்ற பெயரில் சீண்டும் அதிகாரிகள் செயல்ப டுவதை அரசு வேடிக்கை பார்தால் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் சுயமரியாதை மீட்பு போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்னர் என ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் 


தமிழக கல்வித்துறை EMIS பதிவேற்றம் நலத்திட்டங்கள் வினியோகம் உட்பட கல்விசாரா பணிகளால்  மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி,

TEACHERS NEWS
நேரம் கடுமை யாக பாதிப்பதாக ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் கண்ணியக்குறை வாக விமர்சனம் செய்து ஆசிரியர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அதிருப்தியில் உள்ளனர்.


விருதுநகர் மாவட்ட பள்ளி ஆய்வில் 'விருப்ப ஓய்வு பெற்று சென்று விடுங்கள்' என்ற விமர்சனமும். சிவகங்கை பள்ளி ஒன்றில் மாலை வரை ஆசிரியர் களை வருகைப் பதிவில் கையெ ழுத்திடாமல் காக்க வைத்தது, வேலுார் மாவட் டத்தில் மாணவி கள் ரீல்ஸ் வெளி விட்டது தொடர்பாக ஆசிரியரை 'சஸ்பெண்ட்' செய்தது போன்ற சம்பவங்களால் தமிழகம் முழு வதும் ஆசிரியர்கள் கொந்த ளிப்பில் உள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.


தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலா ளர் அன்பழகன் கூறியதாவது:


எதிர்கால சமுதாயத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களிடம் பள்ளி ஆய்வு என்ற பெயரில் கலெக்டர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் அதிகாரத் தன்மையுடன் உத்தரவிடுவது போல பேசுவது, தண் டனை அளிப்பது, ஒருமையில் விமர் சிப்பது போன்ற விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுகின்றனர். போதனை என்ற பெயரில் வளாகத்திற்குள் மிரட்டும் வெளி நபர்களும், பள்ளி மேலாண்மை கமிட்டி, உள்ளூர் பிரமுகர்கள் என பல தரப்பை சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் வந்து அதிகாரத்தை காட்டுவது போன்ற செயல் களை தமிழக அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கிறது.

இது எதிர்கால கல்வியை சிதைப்பதற்கு துணைபோனதாகும். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்கு சென்று விடுங்கள் என ஆசிரியரை அனைவரின் முன்பும் கூறியது, ஆசிரிய சமுதாயத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது கண்டிக் கத்தக்கது.


இதுபோல் சிவகங்கை, வேலுார் உட்பட பல பகுதிகளில் சம்பந்தமில்லாத செயல்களுக்காக ஆசிரியர்களை பழிவாங்குவது தொடர் கிறது. ஏற்கனவே வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசு மீது ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். தற்போது மேற்கண்ட சம்பவங்களும் ஆசிரியர்களின் சுயமரியாதையை சீண்டுவதாக உள்ளது.


இதை அரசு வேடிக்கை பார்ப்பது தொடர்ந்தால் ஒட்டுமொத்த ஆசிரியர் களும் 'சுயமரியாதை மீட்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கூறினார்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459