தமிழக அரசால் 2023ல் நடத்திய தமிழ்நாடு முதல மைச்சர் திறனாய்வு தேர் வில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு ஓராண்டாகியும் கல்வி உதவித் தொகை வழங்காததால் மாணவர்கள் பாதிக் கின்றனர்.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக் கும் வகையிலும் தமிழ் நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு 2023 அக்டோரில் நடந்தது.
ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 673 மாணவர்கள் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியானது. ஆயிரம் பேர் தேர்வாகினர்.
இவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வி யாண்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை உதவித் தொகை வழங்க வில்லை. இந்தாண்டிற் கான தேர்வும் முடிந்துள்ள நிலையில் 2023ல் தேர்வா னவர்களுக்கு கல்வி உதவிதொகை
எப்போது கிடைக் கும் என்ற கேள்வி எழுந் துள்ளது
.
No comments:
Post a Comment