4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




29/09/2024

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

 

dinamani%2F2024-09-29%2Fjg9uiwku%2Fministers-tn

தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (செப். 29) பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


ஆா்.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசா் ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.


அமைச்சரவையிலிருந்து முன்பு நீக்கப்பட்ட வி.செந்தில் பாலாஜி, ஆவடி எஸ்.எம்.நாசா் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். கோவி.செழியனும், ஆா்.ராஜேந்திரனும் முதல்முறையாக அமைச்சர்களாகியுள்ளனர்.


அமைச்சர்களுக்கான துறைகள்


ராஜேந்திரன் - சுற்றுலாத் துறை


செந்தில் பாலாஜி - மின்சாரத் துறை


கோ.வி. செழியன் - உயர்கல்வித் துறை


சா.மு. நாசர் - சிறுபான்மை நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர், அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர்களின் விவரக் குறிப்புகள்


கோவி. செழியன்


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட ராஜாங்கநல்லூரைச் சோ்ந்த கோவி. செழியன் (57), திருவிடைமருதூா் தொகுதியில் 2011, 2016, 2021 என தொடா்ந்து மூன்று முறை திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.


தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக இருந்து வந்த இவா் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளாா். எம்.ஏ., பி.எல்., எம்.பில்., பி.எச்டி. பட்டங்கள் பெற்ற இவா் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.


திமுக தலைமை நிலையப் பேச்சாளராகவும், மாநில வா்த்தக அணி துணைத் தலைவராகவும் உள்ளாா். இவருக்கு மனைவி உமாதேவி, மகள், மகன் உள்ளனா்.


ராஜேந்திரன்


சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரா.ராஜேந்திரன், 2006 முதல் 2011 வரை பனமரத்துப்பட்டி தொகுதியிலும் 2016 முதல் சேலம் வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவா் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


பி.ஏ., பி.எல். பட்டம் பெற்ற இவா் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சுசீலா ராஜேந்திரன் மகள் காா்த்திகா உள்ளனா்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459