தொலைதூர கல்வியில் சேர செப்.30 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/09/2024

தொலைதூர கல்வியில் சேர செப்.30 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு


1318058

தொலைதூர கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூர கல்விதிட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ்படிப்புகளை வழங்கி வருகிறது.இந்நிலையில், 2024 ஜூலை பருவமாணவர் சேர்க்கைக்கான கடைசிதேதி மாணவர்கள், இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோரின் நலனை கருத்தில்கொண்டு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, தொலைதூர கல்வியில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப். 30-ம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம். சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு இந்த கால நீட்டிப்பு சலுகை பொருந்தாது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


🎯Jipmer வேலை வாய்ப்பு CLICK HERE 

🎯கால்நடை பராமரிப்பு துறை வேலை வாய்ப்பு click here 

🎯மத்திய அரசு வேலை வாய்ப்பு CLICK HERE 

🎯Income tax department job wanted Click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459