பள்ளிகளில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட 30 பேர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் குறைந்தபட்சம் ஒரு முறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத் திற்கு சென்று, பள்ளிக்கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கையை, அடுத்த மாதம் 5ம் பள்ளிக் கல்வித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வியின் தரம், எண்ணும் எழுத்தும் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், காலி பணியிடங்கள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி உதவித் தொகை என அனைத்து வேண்டும். பணிகளையும் கண்காணிக்க
முதல்வர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப் பட்ட பொது மக்கள் மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்
என, பள்ளிக் கல்வித்துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment