ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர், கடந்த வாரம் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, புகை பிடித்தபடியே சென்றதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து அந்த மாணவரை அடித்த ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
TEACHERS NEWS |
ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை மீனாட்சி உட்பட 16 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பிளஸ் 2 வரை 783 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1 மாணவர் ஒருவர் கடந்தவாரம் பள்ளி முடிந்ததும், வீடு திரும்பும்போது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் சிகரெட் புகைத்த படியே சென்ற தாகவும், சக மாணவிகள் முகத்தில் புகையை விட்டு கேலி, கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறினர்.
தொடர்ந்து, அவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் முறையிட்டனர். அதன்பேரில், அந்த மாணவனை அழைத்து விசாரித்த ஆசிரியர்கள் அவரை அடித்ததாக தெரிகிறது. இதை தன் பெற்றோரிடம் அந்த மாணவன் கூறியதையடுத்து, அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், இதுபற்றி ஆரணி தாலுகா போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அரசு
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி குமார் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பெற் றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரித்தனர். மேலும், சம்பந்தப் பட்ட மாணவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், மாணவர்களின் கருத்துக்களை எழுதி புகார் பெட்டியில் போடும்படி கூறினர். அதில், மாணவரை ஆசிரியர்கள் அடித்தது உண்மை என தெரிய வந்தது
இதையடுத்து, சேவூர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப் குமார் ஆகியோரை பணியிடை செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நேற்று உத்தரவிட்டார். மேலும், துறை ரீதியில் நிர்வாக மாறுதலாக முதுகலை ஆசிரியர் பாண்டியன் முள்ளண்டிரம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கும்
, முது கலை ஆசிரியர் நித்தியானந்தம் கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றப்பட்டனர்.
இந்த பிரச்னையால். சேவூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
No comments:
Post a Comment