மிலாது நபியையொட்டி வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஏற்கனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுமுறை தேதி மாற்றப்பட்டு இருக்கிறது.
இதற்கான உத்தரவை அரசு பிறபித்து இருந்ததை தொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுதொடர்பான தகவலை அனுப்பியுள்ளார்.
அதன்படி, ஏற்கனவே 16-ந்தேதி பொது விடுமுறையாக இருந்ததை, 17-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) மாற்றி, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment