School Morning Prayer Activities - 22.08.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/08/2024

School Morning Prayer Activities - 22.08.2024

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்:காலம் அறிதல்


குறள் எண்488


செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை

காணின் கிழக்காம் தலை.


பொருள்: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப்பகைவர்க்கு முடிவு காலம் வந்தபோது அவருடைய தலை கீழே விழும்.


பழமொழி :

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கலாம்.


Venture a small fish to catch a big one.


இரண்டொழுக்க பண்புகள் :  


*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .     


 *எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.


பொன்மொழி :


கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். –சாணக்யா


பொது அறிவு : 


1. இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலம்


தமிழ்நாடு ( மெரினா)


2. இந்தியாவின் முதலாவது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலம்

குஜராத்


English words & meanings :


 dash-கோடு,


 pinch-சிறிய


வேளாண்மையும் வாழ்வும் : 


ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு மழைமானி பயன்படுகின்றது.


ஆகஸ்ட் 22 இன்று


சென்னை தினம்


சென்னைதினம்  என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.


கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


நீதிக்கதை


 ஒரு காளையின் அறிவுரை


ஒரு விவசாயிக்கு விசுவாசமான காளைமாடு ஒன்னு இருந்தது. அது எல்லா விதத்திலும் அவருக்கு உதவியாய் இருந்தது. ஒரு நாள் அது பக்கத்துல கொசு ஒன்னு வந்தது. அந்த கொசு காளையிடம் , “நீ தினமும் அந்த விவசாயிக்கு நிறைய உதவி பண்ணுற, நீ தினமும் அந்த விவசாயியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போற. அதுக்கு பதில் உனக்கு என்ன தான் கிடைக்குது வெறும் புல் மட்டும்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள்”.


அதுக்கு அந்த காளைமாடு சொல்லியது, “இங்க பாரு நண்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மனிதர்களுக்கு உதவி பண்றது எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க என்ன ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்க”. அதுக்கு அந்த கொசு  சொல்லியது, “இந்த மனிதர்கள் அவர்களோட தேவைக்காக தான் உன்னை பயன்படுத்துறாங்க அதனால தான் நான் இந்த மனிதர்களுக்கு உதவி பண்றது இல்லை.


அதுக்கு பதில் அவர்களோட ரத்தத்தை நான் உரிந்து விடுவேன், ஆனால் நீ ரொம்ப பெரிய உருவமாக இருந்தும், இந்த மனிதர்களுக்கு நீ அடிமையாய் இருக்கிறாய். ஆனா என்ன பாரு நான் ரொம்ப சின்னதா இருக்கேன் ஆனாலும் அவர்களுடைய ரத்தத்தை  உரிந்து கொண்டு இருக்கிறேன்”.


அந்த காளை மாடு சொல்லியது, “நான் மனிதர்களுக்கு ஏன் உதவி பண்ணுவேன் தெரியுமா, அவங்க எனக்கு சாப்பாடு கொடுக்குறாங்க, தங்க இடம் கொடுத்து இருக்காங்க, உடம்பு சரி இல்லனா ரொம்ப நல்லா கவனிக்கிறார்கள், நான் வேலை செய்தால் பாசத்தோட தட்டிக் கொடுக்கிறார்கள்.  அதனால தான் நான் அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கிறேன்” என்றது.


அதற்கு கொசு சொல்லியது              “ஆனா நீ பண்ற வேலைக்கு இது ரொம்ப கம்மியா தெரியலையா? நீ ராத்திரியும் பகலும் வேலை செய்தால் உனக்கு அன்பு மட்டும்தான் கொடுக்குறாங்க. 


ஆனால் நான் உன்னை விட ரொம்பவும் பரவாயில்லை, பார்க்க ரொம்ப குட்டியா இருந்தாலும் ஒருநாளும் அவர்களுக்கு நான் அடிமையாக இருந்ததில்லை” என்றது கொசு.


அதற்கு காளை மாடு சொல்லியது, “நீ ரொம்பவே முட்டாளா இருக்க,  இதுக்கெல்லாம் நீ பெருமை படவே கூடாது. மனுஷங்களுக்கு ஏன் உன்னை பிடிக்கலைன்னா நீ அவங்களோட ரத்தத்தை உரியுறதுனால, அவங்களுக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேங்குற, நீ ஒரு பூச்சியாக மட்டும்தான் அவங்களுக்கு தெரியுற” என்றது.


“அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றது கொசு. மாடு சொன்னதை கேட்காமல் அந்த கொசு அங்கிருந்து பறந்து போனது. எப்பவும் போல ஒரு நாள் அந்த விவசாயி மேல் போய் உட்கார்ந்து கொசு அவரோட இரத்தத்தை உரிய தொடங்கியது. விவசாயி அந்த கொசுவை ஒரே அடி அடித்து விட்டார்,  கெட்டது செய்தால் கெட்டதே விளையும்.


நீதி : எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய நேரிடும்.


இன்றைய செய்திகள் - 22.08.2024


* மின்வாகனங்களுக்கான சார்ஜர் தயாரிக்கும் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு தேசிய தரச்சான்று.


* தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால்  காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது.


* சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 வரை அவகாசம்: மாநில சுற்றுலாத் துறை ஆணையர் அறிவிப்பு.


* திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும்  இனி தத்தெடுக்கலாம்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.


* டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக பரிந்துரை வழங்க 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை அமைத்தது சுப்ரீம் கோர்ட்.


* பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு.


* வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சுரேஷ் இணை.


* மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது: இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines


* National Certification is given to an IIT Chennai start-up company, that manufactures chargers for electric vehicles.


 * In Tamil Nadu this year, the wind speed has decreased, so the wind power generation has decreased.


 * Deadline to apply for tourism award till August 26: State tourism commissioner notified.


 * Unmarried, widowers, Divorcees, Legally Separated also can now adopt: New Guidelines for adoption is issued by Central Govt 


 * The Supreme Court constituted a 10-member National Task Force to make recommendations for the welfare of medical workers including doctors.


 * In Pakistan sequenced earthquake: Record of 5.1hz on Richter scale.


 * Winston Salem Open Tennis: India's Suresh Pair movedup to quarterfinals.


 * ICC released women's ODI batting rankings: India's Smriti Mandana moves up to 3rd place.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459