மத்திய அரசு தந்த நிதியை தமிழக அரசு Emisக்காக பயன்படுத்துவது நியாயமா? கணினி ஆசிரியர்கள் சங்கம் வேதனை... - ஆசிரியர் மலர்

Latest

 




30/08/2024

மத்திய அரசு தந்த நிதியை தமிழக அரசு Emisக்காக பயன்படுத்துவது நியாயமா? கணினி ஆசிரியர்கள் சங்கம் வேதனை...


images%20(5)

தமிழகத்தில் உள்ள அரசு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பி.எட். படித்த கணினி பயிற்சியாளர்களை நியமிக்க மத்திய அரசு தந்த நிதியை, மாநில அரசு Emis பணிக்காக நியமனத்திற்கு செலவு செய்வது நியாயமா என கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


 இதுகுறித்து தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Samagra Shiksha திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மேல்நிலை நடுநிலைப் பள்ளிகளில் முறையாக 14000 கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கவும், கணினி அறிவியல் பாடத்திற்கு என பாடபுத்தகமும் பாடவேளைகளும் ஒதுக்கித் தர வேண்டும் என்று மத்திய அரசு தந்த நிதியை, மாநில அரசு Emis பணிக்காக பணியாட்களை நியமனம் செய்வது நியாயமா??



மத்திய அரசு நிதி தராமல் இருப்பது தவறுதான். ஆனால் மாநில அரசு வாங்கிய நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் அல்லவா? நடுநிலைப் பள்ளிகளில் 8209 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் கேரள மாநிலத்தின் கெல்ட்ரான் நிறுவனத்திடம் ஒப்பந்தம்.


2021 -2022-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினி பயிற்றுனர் நியமனத்திற்கு நிதி பெற்று வருகிறது. 9-10-ஆம் வகுப்பிற்கு கணினி பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கணினி அறிவியல் பாடமும் தனியான பாடமாக இல்லை. அரசு பள்ளிகளில் கணினியில் பாடத்திற்காக தனி பாட வேலை இன்றி இன்று வரை செயல்பட்டு வருகிறது.


மாண்புமிகு தமிழக முதல்வர், இதில் தனிக் கவனம் செலுத்தி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப் படி ஒப்பந்த முறையில் ஆட்கள் நியமனம் செய்யாமல் கணினி அறிவியல் பிஎட் முடித்தவர்களை


தமிழக அரசே நேரடியாக கணினி பயிற்றுநர்களாக நியமனம் செய்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சங்கம் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459