கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/08/2024

கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை

தமிழக அரசின் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள்வட்டார வாரியாக நடைபெற உள்ளது.

 முகாம் நடைபெறும் நாள் நேரம், மற்றும் இடம்: 28.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், தென்காசி.

 29.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், கடையம்.

 30.08.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், கடையநல்லூர்.

 03.09.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், கீழப்பாவூர். 

04.09.2024, 10AM-2 PM, வட்டார வளர்ச்சி அலுவலகம், சங்கரன்கோவில். 

 வட்டார வாரியாக மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. கடன் பெறுவதற்கான நிபந்தனைகள்: வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி பத்திரம். ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால் மூன்றாம் நபர் உத்திரவாதம் அவசியம்.மேலும் நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் (மேனேஜ்மெண்ட் கோட்டா, கல்லூரி கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதவர்கள்) சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு கட்டாயம் சொத்து பிணை அவசியம். இதையும் வாசிக்க : விண்ணப்பிக்கும் முறை: கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் மற்றும் என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன் முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.இம்முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ரேசன் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை நகல், மாணவ / மாணவியர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -3, பான்கார்டு நகல், 10, 11, 12ம் வகுப்பு தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் (T.C) நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின்


அதற்கான சான்று நகல், ஜாதிச் சான்றிதழ் நகல், இருப்பிட சான்று நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட (கவுன்சிலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல், கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல் (College Fees / Bonafide Certificate) மற்றும் கல்விக் கடன் பெறும் வங்கியின் பெயர், கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459