தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள "தமிழைப் பிழையின்றி எழுதுவோம்" கையேடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/08/2024

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள "தமிழைப் பிழையின்றி எழுதுவோம்" கையேடு

 

 

IMG_20240828_113010

சங்கம் வளர்த்த தமிழ்ச்சோலையில் குழலும் யாழும் மயங்கும் . உயிருக்கு ஒப்பாய் உயிரெழுத்து : தனித்து இயங்கா மெய்யெழுத்து ; உடம்புடன் கலந்த உயிரேபோல் உயிர்மெய்யென எண்ணிடலங்காப் பெருமைக்குரிய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி . இம்மொழி , பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் , எளிதாகத் தொடர்பு கொள்ளும் தொடர்பு மொழியாகவும் உள்ளது. 


தமிழர்கள் மட்டுமின்றி , பல அயலகத்தாரும் தமிழில் இலக்கண இலக்கியங்களை இயற்றியுள்ளார்கள் . எம்மொழியாயினும் அம்மொழியின் அடிப்படைக் கூறுகளைக் கற்றுத் தெளியவேண்டும். அத்தகைய வகையில் ' தன்னேரிலாத் தமிழ் ' என்ற தமிழின் சிறப்பினை உணர்ந்தவர்கள் தமிழின் அடிப்படைகளை மெல்ல மெல்லக் கற்கின்றனர். 


இதன் மூலம் தமிழைப் பிழையின்றிப் பேசவும் , எழுதவும் முயற்சி செய்து வருகின்றனர் . இன்று , உலகெங்கும் தமிழின் செம்மாந்த நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் வந்தவண்ணமுள்ளன. அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகமும் குறுகிய காலத்தில் தமிழைப் பிழையின்றிப் படிப்பதற்கும் , எழுதுவதற்கும் தமிழைப் பிழையின்றி எழுதுவோம் ' என்ற புத்தகத்தை உருவாக்கியுள்ளது.

Thamizhai_Pizhaiyinri_Ezhuthuvom.pdf👇👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459