பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க, அனைத்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 210 என, குறைக்க இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு 210 நாட்கள்தான் வேலை நாட்களாக இருப்பது வழக்கம். இந்த கல்வியாண்டில்
220 நாட்கள் என, அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமையும் வேலை நாட்கள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இதை மாற்றி, வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க வேண்டும் என, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த மாதமும், இந்த மாதமும் சனிக்கிழமை வேலை நாட்கள் இல்லை.
அதன் அடிப்படையில், மீண்டும் வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டு, சனிக்கிழமை வேலை நாட்கள் சரி செய்யப்பட்டு, விரைவில் திருத்திய ஆணை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளி வர உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment