Union Budget 2024 - புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம்! - ஆசிரியர் மலர்

Latest

 




24/07/2024

Union Budget 2024 - புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம்!

 

 

dinamani%2F2024-07%2F7f682f3b-9e46-4bc4-b966-f95f2f0b332a%2FnirmalaPTI07_23_2024_000079B

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் உரையாற்றி வருகிறார்.


இந்நிலையில், 4.1 கோடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிதாக பணியில் சேரும் ஈபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக அரசுத் தரப்பில் ஒரு மாதம் சம்பளமாக ரூ. 15,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459