School Morning Prayer Activities - 25.07.2024 - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/07/2024

School Morning Prayer Activities - 25.07.2024


 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024


திருக்குறள் 


பால் : பொருட்பால்


அதிகாரம் :அறிவு உடைமை


குறள் எண் :426


எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.


பொருள் : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


பழமொழி :

ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?


The child is father to the man.


இரண்டொழுக்க பண்புகள் :


*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 


 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :


"வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை, வேலையை விரும்பிச் செய்பவன் அரசன். "-----ஓஷோ


பொது அறிவு : 


1.பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை


விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்


2. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?


விடை: 11500


English words & meanings :


 with stand-தாங்கு,


  detain-தடு


வேளாண்மையும் வாழ்வும் : 


இதற்கு இப்பெயர் வரக் காரணம் பண்டையக் காலத்திலிருந்து இந்த அரிசியில் செய்த உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.


ஜூலை 25 இன்று


ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.


நீதிக்கதை


 புதையல் ரகசியம்


ஒரு ஊரில் ராஜன் என்ற பணக்காரர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். முதுமை பருவத்தை அடைந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நான்கு பேரும் ஒற்றுமையாகவும், தந்தையிடம் பாசத்துடனும் இருந்தார்கள்.


 திடீரென்று ஒரு நாள் ராஜனுக்கு உடல்நிலை பாதித்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்து வந்தது. நான்கு மகன்களும் தந்தைக்கு அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டனர்.


அவர்களிடம் ராஜன்,"என் அருமை மகன்களே! எனக்கும் வயதாகி விட்டது. உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. நான் படுத்து இருக்கும் இந்த கட்டிலின் கால்களை பார்த்துக் கொள்ளுங்கள்.


முதலாவது கால் மூத்தவனுக்கு, இரண்டாவது கால் இரண்டாவது மகனுக்கு, மூன்றாவது கால் அடுத்த மகனுக்கும், நான்காவது நான்காவது கால் கடைசி மகனுக்கும் சொந்தமானது.


என்னுடைய மரணத்திற்கு பின்பு நான் கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே இருக்கும் புதையலை எடுத்து நீங்கள் நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்றார்.


சில தினங்களில் ராஜனும் மறைந்தார். தந்தையருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நான்கு மகன்களும் செய்தனர். பின்னர் தந்தை கூறியபடி  கட்டில் கால்களுக்கு கீழே புதையலை தோண்டினார்கள். தந்தையார் கூறியபடி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டபடி இருந்த பானைகளை எடுத்துக் கொண்டார்கள். 


மூத்த மகனின் பானையில் முழுவதும் மண் இருந்தது. அடுத்த மகனின் பானையில் உமி இருந்தது.மூன்றாவது மகன் எடுத்த பானையில் பொன் துகள்கள் இருந்தன. கடைசி மகனின் பானையில் சாம்பல் நிரம்பி இருந்தது.


நான்கு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. பானைக்குள் இந்த பொருள்களை வைத்தது ஏன்? இதை வைத்து என்ன செய்வது? என்று குழம்பிப் போனார்கள். 


எனவே தங்கள் ஊரில் இருந்த மரியாதை ராமனிடம் சென்று கேட்டார்கள். மரியாதை ராமனும் நான்கு பானைகளையும் உற்றுப் பார்த்தார். பின்பு யோசித்தார். தீர்வை கூறினார்.


நான்கு பேரையும் கூப்பிட்டார். "உங்கள் தந்தையார் புத்திசாலித்தனமாக தான் செய்திருக்கிறார். மண்ணைப் பெற்ற மூத்த மகன் தந்தையாரின் நிலங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உமியைப் பெற்ற இரண்டாவது மகன் தானியங்களுக்கு சொந்தக்காரர். பொன் துகளை பெற்றவர் நகைகளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். சாம்பலைப் பெற்றவர் ஆடு மாடுகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு திட்டத்தில் தான் உங்கள் தந்தையார் சொல்லியிருக்கிறார் அதன்படி பிரித்துக்  கொண்டு ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறினார் மரியாதை ராமன்.


 நான்கு சகோதரர்களும் மரியாதை ராமனுக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.


இன்றைய செய்திகள் - 25.07.2024


🌐21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.


🌐தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


🌐நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.


🌐 இளநிலை ‘நீட்’ தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது: 20 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து.


🌐உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது.


🌐இந்திய ஆக்கி அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு.


🌐மகளிர் ஆசிய கோப்பை: மலேசிய அணியை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி.


🌐டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி கோவை அணி 5-வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.


Today's Headlines


🌐Entering into its 21st year, the Madurai Bench of the High Court has set a record of hearing 12.30 lakh cases in the last 20 years.


 🌐Chance of rain with thunder and lightning in Tamil Nadu today: Chennai Meteorological Department.


🌐 Karnataka resolution against NEET exam with Cabinet's  approval 


 🌐Junior 'NEET' result cannot be annulled: Supreme Court says that it will affect 20 lakh students.


 🌐Singapore has topped the world's most powerful passport rankings.  With visa-free travel to 58 countries, India is ranked 82nd in this ranking.


🌐 India's leading goalkeeper Sreejesh retired from international competition with the Paris Olympics.


 🌐Women's Asia Cup: Bangladesh beat Malaysia to win

 

Prepared by

Covai women ICT_போதிமரம் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459