மத்திய அரசின் பட்ஜெட்( India Central government Budget) : வருமான வரி விலக்கு மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




23/07/2024

மத்திய அரசின் பட்ஜெட்( India Central government Budget) : வருமான வரி விலக்கு மாற்றம்


தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% -ல் இருந்து 6% ஆக குறைக்கப்படும் என்றும் செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15% குறைப்பு என்றும் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் சில அறிவிப்புகள் பின்வருமாறு.. *ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை, ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வருமானவரி செலுத்த வேண்டும்.ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை 15% வருமானவரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வருமான வரி செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட வரி விகிதங்களின்படி மாத ஊதியதாரர்களுக்கு வருமானவரி வகையில் ரூ.17,500 வரை மிச்சமாகும். *தனிநபர் வருமானவரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000ஆக அதிகரிப்பு . தனிநபர் வருமானவரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. *புற்றுநோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. *தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்திற்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. *தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% -ல் இருந்து 6% ஆக குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%-ல் இருந்து 6.5%ஆக குறைப்பு..! *இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1 சதவீதமாக குறைப்பு. *வருமான வரி தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆவது குற்றம் அல்ல . *தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும். செல்போன் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்கவரி 15%ஆக குறைப்பு. இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான கங்கவரி 25% அதிகரிப்பு. ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் வரை மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். *வெளிநாட்டு நிறுவனங்களின் லாபம் மீதான வரி 40%லிருந்து 35%ஆக குறைப்பு. *2024-25 நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு; 2024-25 நிதியாண்டிற்கான கடன் அல்லாத மொத்த வரவுகள் ரூ.2.07 லட்சம் கோடியாக மதிப்பீடு;மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடி; நிகர வரி வரவு ரூ.25.83 லட்சம் கோடி; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆக கணக்கீடு! *உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விதிகள் எளிமையாக்கப்படும் *தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டுவரப்படும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459