DEE - ஆசிரியர்களுக்கு நாளை முதல் நடைபெறுவதாக இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




31/07/2024

DEE - ஆசிரியர்களுக்கு நாளை முதல் நடைபெறுவதாக இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 IMG_20240731_174714

பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட அனுமதிக்கப்பட்டது . அதன்படி கலந்தாய்விற்கான கால அட்டவணை பார்வை -3 ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அனுப்பப்பட்டது. 


பார்வை 3 ல் காணும் 10.07.2024 நாளிட்ட செயல்முறைகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீள வாய்ப்பளித்து 01.08.2024 , 02.08.2024 மற்றும் 05.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்வு , தற்போது நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு


இன்னும் நிறைவு பெறாத காரணத்தினால் நிர்வாக காரணம் கருதி மேற்படி கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும்.


மேலும் 01.08.2024 மற்றும் 02.08.2024 அன்று நடைபெறவிருந்த மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு தெரிவிக்கலாகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459