வெள்ளத்தின் நடுவே மாணவர்களை தோளில் சுமந்து சென்ற ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

 




28/07/2024

வெள்ளத்தின் நடுவே மாணவர்களை தோளில் சுமந்து சென்ற ஆசிரியர்

 தெலுங்கானாவில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத் தில் கனமழை பெய்து வருகிறது.


இம்மாவட்டத்தின் ஜெய்ஹிந்த்புரம் அடுத் துள்ள பெஞ்சிகாலபேட் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், அங்குள்ள ஓடையைக் கடந்தே பள்ளிக்கு வரும் நிலை உள்ளது.


கனமழை பெய்து வரும் சூழலில், சிறுவர்கள் நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது, ஓடையில் குறைந்த அளவே தண்ணீர் சென்றது.


மாலை பள்ளி முடிந்து வீட்டு வரும் போது,


ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆர்ப்பரித்து சென்ற தண் ணீரை கண்ட சிறுவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.


அப்போது, அங்கு வந்த அவர்களின் பள்ளி ஆசிரியர் சந்தோஷ், 10க்கும் மேற்பட்ட சிறு வர்களை ஒருவர் பின் ஒரு வராக தோளில் சுமந்து கரை சேர்த்தார். உள்ளூர் கிராம மக்களுக்கும் ஆசி ரியருக்கு உதவும் வகை யில், பிற மாணவர்களை சுமந்து சென்று கரை சேர்த்தனர். 


காட்டாற்று வெள் ளத்தின் நடுவே தன் உயிரையும் பொருட்ப டுத்தாமல் சிறுவர்களை பத்திரமாக கரை

TEACHERS NEWS
சேர்த்த ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டினர்.

.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459