மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளின் ஒவ் வொருவகுப்பிற்கும்நூலக புத்தகங்களாக பரிந்துரைக் கப்பட்ட அனைத்து புத்த கங்களும் கிடைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல் நிலை பள்ளியில் நூலக - ராக பணிபுரிந்தவர் பணி ஓய்வு பெற்றார். நுாலக - ராசு 2019 ல் ஜெயஸ்ரீ நிய மிக்கப்பட்டார். இதற்கு - பள்ளி நிர்வாகம் பள்ளிக் - கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரியது. தேவகோட்டை கல்வி - மாவட்ட அலுவலர் நிராக - ரித்தார். அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவி டக்கோரி பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனு
செய்தார். தனிநீதிபதி, நூலகர் பதவியில் இருப்பவர் ஓய்வு பெறும்போது அல்லது பதவி உயர்வு பெறும்போது, அப்பணியி தல் டம் காலாவதியாகிவிடும். அரசிடம் பணியிடத்தை ஒப்படைக்க வேண்டும். புதிய நுாலகரை நியமிக்க நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை. இது அரசாணை யில் உள்ளது. மனு தள்ளு படி செய்யப்படுகிறது. என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாளாளர் மேல்முறையீடு செய்தார். ஏற்கனவே விசாரணை யின்போது அரசு தரப்பு: உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நூலகர்,ஓய்வு அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்றால் அப்பணியிடம் நீக்கப்படும். இது பள்ளிக் கல்வித்துறையின் (2018) அரசாணையில் உள்ளது. மனுதாரர் பள்ளி ஒப்புதல் கோருவது விதிகளுக்கு எதிரானது. இதனால் ஒப்புதல் மறுக்கப்பட்டது. இதை தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
மீண்டும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வகுப்பறை அலமாரிகளில் உள்ளன. ஆசிரியரின் வழிகாட்டுதல்படி மாண வர்கள் விருப்பப்படி புத் தகங்களை எடுக்க அனும திக்கப்படுவர்.
இதற்காக
மின் ஆளுமை
செயலி (இ-கவர்னன்ஸ் ஆப்) பயன்படுத்தப்படு கிறது. இம்முறையின் கீழ் மாணவர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்ல அனும் திக்கப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்:
பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிற்கும் நூலகபுத்தகங்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற விபரங்களை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஜூலை 31ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்
No comments:
Post a Comment