தமிழகத்தில் கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமனம்: பள்ளி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/07/2024

தமிழகத்தில் கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமனம்: பள்ளி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

 அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, மாதிரி பள்ளிகளை கண்காணித்தல் உட்பட கல்வித்துறை சார்ந்த பணிகளுக்காக கலெக்டர்களுக்கு தனி (கல்வி) கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் அவரது அலுவல் சார்ந்த தகவல், துறை ரீதியான கூட்டங்களை ஒருங்கிணைத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்கு கலெக்டருக்கு உதவியாக தனி கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் அந்தஸ்தில் இவர் நியமிக்கப்படுகிறார்.


கலெக்டருக்கு தனி கிளார்க்


இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:


நியமிக்கப்பட்டுள்ள தனி கிளார்க் பள்ளிகள் சார்ந்த பணிகளை கண்காணிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை 18, 19 களில் நடக்கிறது. அதற்கு பின் கலெக்டரின் தனி (கல்வி) கிளார்க் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459