3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




25/07/2024

3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

 

 

1284584

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 7 ஆயிரம் மாணவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.


இதற்கிடையே, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் / www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459