தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.
சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
https://tnpsc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம்.
No comments:
Post a Comment