போட்டித் தேர்வுகளுக்கு [NEET / JEE] மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/06/2024

போட்டித் தேர்வுகளுக்கு [NEET / JEE] மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 

IMG_20240620_061943

2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவமாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


 இதன் தொடர்ச்சியாக , போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால் , பயிற்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . எனவே , போட்டித் தேர்வுகளுக்குகான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - NEET 2024-2025 - SOP- Proceedings👇👇👇

Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459