JEE ADVANCE EXAM RESULT PUBLISHED - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2024

JEE ADVANCE EXAM RESULT PUBLISHED

ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 1.80 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் 48, 248 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். என்.ஐ.டி, ஐ.ஐ.டி.,யில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜே.இ.இ., தேர்வானது ஜே.இ.இ., – முதல்நிலை (மெயின்), ஜே.இ.இ., – முதன்மை (அட்வான்ஸ்) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். நாடு முழுவதும்


மே 26ம் தேதி ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு நடைபெற்றது. தேர்வை 1.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிகள் இன்று (ஜூன் 09) வெளியானது. 1.80 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் 48, 248 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். டில்லியை சேர்ந்த வேத் லகோதி என்ற மாணவி 355 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459