BT / BRTE - TRB ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/06/2024

BT / BRTE - TRB ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!!!

 


IMG_20240605_222150_wm
ஆசிரியர் தேர்வு வாரிய வெளியீடு:

2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3192 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை எண் 03/2023 , நாள் 25.10.2023,34 / 2023 , நாள் 15.11.2023 மற்றும் 3B / 2023 , நாள் 17.05.2024 அன்று வெளியிடப்பட்டது.

 விண்ணப்பதாரர்கள் 13.12.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 41,485 பேர் , அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 04.02.2024 அன்று " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ” OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு எழுதியோர் 40,136 பேர் . 2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 18.05.2024 மற்றும் 22.05.2024 அன்று வெளியிடப்பட்டன. பணிநாடுநர்கள் " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ' OMR ( Optical Mark Reader ) வாயிலாக தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன் பணிநாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் // ற்குத் தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் அரசாணை ( நிலை ) எண் 147 பள்ளிக் கல்வித் ( ஆ . தே . வா ) துறை , நாள் 22.08.2023 - ல் தெரிவித்துள்ளவாறு தகுதி மதிப்பெண்களை ( Weightage marks ) சேர்த்து மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் , இவ்வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 


சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது 


மேலும் கடந்த வாரம் தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் இரண்டாம் தேதி முடிவடைந்த நிலையில் பணி நியமனத்துக்கான கடைசி இறுதி பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது ஆசிரியர்கள் சிலர் கேள்வித்தாளின் தன்மை சரி இல்லை என்றும் கேள்வித்தாளில் அநேக வினாக்கள் தவறான வினாக்கள் என சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாரர் சுதா அவர்களின் வழக்கு நீதியரசர் முன்னிலையில் வந்தது நீதியரசர் வழக்கின் தன்மையை ஆராய்ந்து முகாந்திரம் இருக்கிறதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அனைத்து பணி நியமங்களையும் நிறுத்தி வைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதில்களை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்

இது ஏற்கனவே தேர்வு பெற்றவர்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த ஆசிரியர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459