கலை அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நாளை தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2024

கலை அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

தமிழக உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ. என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-2025-ம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப் பங்கள் குவிந்தன.


அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினா். இந்தநிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றனா். இதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025-ம் கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப் படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவா். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந் தாய்வில் பட்டப்படிப்புக் கான மாணவா் சோ்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459