பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/06/2024

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு

 


 

1264654

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459