Google pay தெரியும்...அதென்ன Google vault ...பயன்படுத்துவது எப்படி.. - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/05/2024

Google pay தெரியும்...அதென்ன Google vault ...பயன்படுத்துவது எப்படி..

கூகுள் சமீபத்தில் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் யூசர்களுக்காக வாலட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலவச அப்ளிகேஷனில் நீங்கள் ரிவார்டுகள், டிக்கெட்டுகள் மற்றும் கார் சாவிகளை கூட சேமிக்க இதனை ஒரு டிஜிட்டல் ஹப் போல பயன்படுத்தலாம். இந்தியாவில் அறிமுகமான கூகுள் வாலட் என்பது, அதன் சர்வதேச வெர்ஷனை காட்டிலும் வித்தியாசமானது என்பதால், அதில் வங்கி கார்டு சேமிக்கவோ அல்லது டிஜிட்டல் பேமெண்ட்களை செய்யவோ முடியாது. கூகுள் பே நிறுவனத்தின் பேமெண்ட் அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. அனைத்து பகுதிகளிலும் எல்லா அம்சங்களும் கிடைக்காது. ஆனால் வரக்கூடிய மாதங்களில் அவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறோம் என்று கூகுள் அதன் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளது. கூகுள் வாலட்டை பயன்படுத்துவது எப்படி? உங்களுடைய டிஜிட்டல் வாழ்க்கையில் பல்வேறு டாக்குமெண்ட்டுகளை எளிமையான முறையில் சேமிப்பதற்கு இந்த கூகுள் வாலட் உதவுகிறது. உங்களுடைய ஆன்ட்ராய்டு போனில் கூகுள் வாலட்டை எப்படி அமைப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்: முதலில் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் வாலட் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். டவுன்லோட் செய்தபிறகு கூகுள் வாலட் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, ஸ்கிரீனில் தெரியும் வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் புதிய யூசராக இருந்தால் பேமெண்ட் கார்டை ஆட் செய்ய சொல்லி கேட்கப்படுவீர்கள். அதனை உங்களுடைய கேமராவில் ஸ்கேன் செய்தோ அல்லது நீங்களாக விவரங்களை டைப் செய்தோ எண்டர் செய்யலாம். நீங்கள் ஏற்கனவே கூகுள் பே பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் உங்களுடைய கார்டுகள், டிக்கெட்டுகள் மற்றும் பாஸ் போன்றவற்றை கூகுள் வாலட்டில் உங்களால் காண முடியும். உங்களுடைய ஆன்ட்ராய்டு போனில் கூடுதல் பாதுகாப்பிற்காக ஸ்கிரீன் லாக்கை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் போனை பயன்படுத்தி காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களை செலுத்துவதற்கு முன்பு போனில் NFC ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா மற்றும் கூகுள் பே உங்களுடைய டீஃபால்ட் பேமெண்ட் அப்ளிகேஷனாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். மேலும் படிக்க: எனினும் பழைய ஆன்ட்ராய்டு யூஸர்கள் கூகுள் வாலட் அப்ளிகேஷனை பயன்படுத்த கூகுள் அனுமதிக்காது. ஜூன் 10ஆம் தேதி முதல் 9 (Pie)-க்கு முற்பட்ட ஆன்ட்ராய்டு வெர்ஷன்கள் அல்லது 2.x-க்கு முன்புள்ள Wear OS வெர்ஷன்களில் கூகுள் வாலட் செயல்படாது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் பழைய ஆன்ட்ராய்டு வெர்ஷன்களில் இணக்கத் தன்மையை பராமரிப்பது சவாலான காரியமாக அமைகிறது.


இந்த அப்டேட் மூலமாக யூசர்கள் கூகுள் வாலட் கொண்டு காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களை செலுத்தலாம். கூகுள் பே மற்றும் கூகுள் வாலட் ஆகிய இரண்டும் தனித்துவமான நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இரு வேறு அப்ளிகேஷன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459