போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/05/2024

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

 


dinamani%2F2024-05%2F34de7aa2-a865-49cb-8d38-6974f7c5b5fb%2FScreenshot_2024_05_20_085649

பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


அதன் மூலம் நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன.


அந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை.


பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இந்தப் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459