தொடக்க, நடு நிலைப்பள்ளிகளிலும் இணையதள சேவை ஏற் படுத்த வேண்டும் என்ற தொடக்கக் கல்வித்துறை உத்தரவை செயல்படுத்த போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் தலைமை ஆசிரியர்கள் மனஉளைச்ச லில் உள்ளனர்.
தமிழகத்தில் தொடக் கப் பள்ளிகளிலும் இணை யதள சேவை வசதியை ஏற்படுத்த வேண்டும் என அரசு கருதுகிறது. வருங் காலங்களில் அரசு பள்ளி களில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்ற கட்டமைப்பு தேவைக்காக இப்போதே நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இதற்காக பி.எஸ்.என்.எல்., ரயில்நெட் இணையதள சேவையை பள்ளிகளில் ஏற்படுத்த தலைமை ஆசிரியர் களுக்கு அதிகாரிகள் உத்த ரவிட்டுள்ளனர். பி.எஸ். என்.எல்., அதிகாரிகளை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
சில அதிகாரிகள் குறிப் பிட்ட துாரத்தை தாண்டி உள்ள பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு வழங் குவது உட்பட பணிக ளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செல வாகும் எனத் தெரிவித் துள்ளனர். சில அதிகாரி கள் பிற அதிகாரிகளை கைகாட்டி ஒதுங்கிக்கொள் கின்றனர். சிலர் தலைமை ஆசிரியர்களின் அலை பேசி அழைப்பை ஏற்ப தில்லை. மேற்கண்ட அரசுநிறுவனங்கள் தவிர தனி யார் நிறுவன சேவையை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவால் இணை யதள சேவையை எப்படி பெறுவது என புலம்பு கின்றனர்.
தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் ‘அரசு பள்ளிகளில் இணையதள சேவை என்பது வரவேற்க கூடியது. ஆனால் அதை புரிந்து கொண்டு அரசு தொலைத் தொடர்பு நிறு வனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அரசின் இந்த நோக்கம் நிறைவேற, அந்தந்த பகுதி யில் எளிதாக கிடைக்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தர விட்டால் ஆசிரியர்களால் எளிதாக இச்சேவையை பெற்று பயன்படுத்தலாம்' என்றனர்.
No comments:
Post a Comment