முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வில் மோசடி: 2 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/05/2024

முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வில் மோசடி: 2 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது

டேராடூன், எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளி சேர்வதற்கு எய்ம்ஸ் நிர்வாகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (INICET) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வில் மோசடி செய்ததாக 2 எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட 5 பேரை டேராடூன் போலீசார் கைது செய்துள்ளனர். இதன்படி அரியானாவைச் சேர்ந்த டாக்டர் அஜித் சிங்(44), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் வைபவ் காஷ்யப்(23), அரியானாவைச் சேர்ந்த அமன் சிவாச்(24), விபுல் கவுரா(31) மற்றும் ஜெயந்த் (22) ஆகிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா பகுதியில் தேர்வு எழுதிய 3 தேர்வர்கள், வினாத்தாளை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து அதை டாக்டர் வைபவ் காஷ்யப் மற்றும் டாக்டர் அஜித் சிங்கிற்கு அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான பதில்களை அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தேர்வில் உதவி செய்ய மொத்தம் ரூ.50 லட்சம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், தேர்வு முடிந்தவுடன் ரூ.25 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளிவந்த பிறகு மீதி ரூ.25 லட்சத்தை பெறுவதற்கு இவர்கள் தயாராக இருந்தனர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். அதே போல் இரண்டு டாக்டர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459