தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே.06) காலையில் வெளியாகின. தமிழகம் முழுவதிலும் இருந்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் ஆகும்.
3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்கள் தேர்வெழுதி 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவிகள் தேர்வெழுதி 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 26 ஆயிரத்து 860 மாணவர்களும், 14 ஆயிரத்து 550 மாணவிகளும் என 41,410 மாணவ – மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
2024-2025ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறும் பணியும் இன்று முதல்துவங்கியுள்ளன.
12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களும் இந்தக் கல்வியாண்டிலேயே உயர்கல்வியில் சேரும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உடனடியாகச் சிறப்புத் துணைத்தேர்வு நடத்துகிறது.
இந்தத் துணைத் தேர்வு அனைத்துப் பாடங்களுக்கும் நடத்தப்படும். இந்தத் துணைத் தேர்வில் தோல்வியடைந்த பாடத்தை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் ஒரு முழுக் கல்வியாண்டு வீணாகாமல் இந்த ஆண்டிலே உங்களால் உயர்கல்வியைத் தொடர முடியும்.
No comments:
Post a Comment