மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான அம்சங்களை இதற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மேலும் தொடர்ந்து இன்னும் எக்கச்சக்கமான அம்சங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது சமீபத்தில் வெளியான அறிக்கைகளின் படி வாட்ஸ்அப் அதன் யூசர்களை வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களை செய்வதற்கு அனுமதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள யூசர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி சர்வதேச பேமெண்ட்களை செய்வதற்கான புதிய அம்சத்தை தற்போது உருவாக்கி வருகிறது. இது ஏற்கனவே அப்ளிகேஷனில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface – UPI) மூலமாக சாத்தியமாக்கப்படும்.
இந்த அம்சம் இன்டர்நேஷனல் பேமெண்ட் (International Payments) என்ற பெயருடன் அழைக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி இந்திய வங்கி அக்கவுண்ட் ஹோல்டர்கள் வெளிநாடுகளுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம். எனினும் சர்வதேச UPI சேவைகளை எனேபிள் செய்துள்ள வங்கிகள் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே இந்த அம்சத்தை ஒருவர் பயன்படுத்த முடியும்.
இது சம்பந்தமாக வெளியான ஸ்கிரீன்ஷாட் ஒன்றில் யூசர்கள் தாங்களாகவே இன்டர்நேஷனல் பேமெண்ட் அம்சத்தை எனேபிள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது
. இந்த அம்சத்தை எவ்வளவு நேரம் ஆக்டிவாக வைக்க விரும்புகிறார்கள் என்பதையும் தேர்வு செய்வதற்கான ஆப்ஷனை யூசர்கள் பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment