அரசு ஊழியர்களுக் கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு வழங்கிய அகவிலைப்படியை இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய முடியா ததால் அகவிலைப்படி நிலுவைத்தொகை தாம் தமாகும் நிலை ஏற் பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தால் அகவிலைப்படி நிலு வைத்தொகையை ஜன., முதல் மார்ச் வரை உள்ள நிலுவைகளை ஏப்., மாதத் தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளம் களஞ்சியம் இணையத ளத்தின் வழியாக வழங் கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி நிலு வைத்தொகை பெறுவதற் காக 'கால் வெப் ஐபி,' என்ற ஐ.டி.,யில் சென்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. பலரது நிலுவை தொகைகள் கணக்கில் ஏறவில்லை. ஒருவருக்கு இரு முறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படி முழுமை பெறாததால் ஏப்., மாதத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு
அக விலைப்படி நிலுவைத் தொகை வழங்கியும் அதனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment