பள்ளி வேலைநாள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் செயல்முறைகள் (அறந்தாங்கி கல்வி மாவட்டம், தஞ்சாவூர் கல்வி மாவட்டம்,கரூர் கல்வி மாவட்டம், புதுக்கோட்டை கல்வி மாவட்டம், நாகப்பட்டினம் கல்வி மாவட்டம்) - ஆசிரியர் மலர்

Latest

 




05/04/2024

பள்ளி வேலைநாள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் செயல்முறைகள் (அறந்தாங்கி கல்வி மாவட்டம், தஞ்சாவூர் கல்வி மாவட்டம்,கரூர் கல்வி மாவட்டம், புதுக்கோட்டை கல்வி மாவட்டம், நாகப்பட்டினம் கல்வி மாவட்டம்)

அறந்தாங்கி


தஞ்சாவூர் 



பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை

 கரூர் கல்வி மாவட்டம் ( தொடக்கக் கல்வி ) , அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 05.04.2024 வரையிலும் , நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 12.04.2024 வரையிலும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.


விடுபட்ட தேர்வுகள் 22.04.24 மற்றும் 23.04.24 ஆகிய தேதிகளில் நடைபெறும் . தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அந்நாளில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் . ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது.


 அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம் . தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி , மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி , மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தல்


மற்றும் பிற பணிகள் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459