தேர்தல் பணிக்கு போறோம்ல கிளம்புறதுக்கு நாளைக்கு விடுமுறை விடுங்க - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2024

தேர்தல் பணிக்கு போறோம்ல கிளம்புறதுக்கு நாளைக்கு விடுமுறை விடுங்க - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 .com/

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திடீரென தமிழக அரசுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது.. 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது.

19 வாக்குப்பதிவு என்பதால், 17-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும். தேர்தல் தினத்தன்று நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்திருக்கிறது.


ஆசிரியர்கள்: வழக்கமாக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.. அந்தவகையில் இந்த முறையும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.. தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு மையத்தில் பணி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று, வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


ஸ்பெஷல் பயிற்சி: அந்தவகையில், தற்போதைய மக்களவைத் தேர்தல் பணியில் கோவை மாவட்டத்தில் 15,860 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கெனவே சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை அதாவது ஏப்ரல் 17ம் தேதி விடுமுறை வழங்க வேண்டுமென நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


பொதுத்தேர்வு: இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஆ.ராமு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் 88 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ல் நடத்தப்பட உள்ளது.


இதையடுத்து, அனைத்து நிலை ஆசிரியர்களும் ஏப்ரல் 18, 19-ம் தேதிகளில் தேர்தல் பணிகளில் பங்கேற்க வேண்டும்


. அதற்கு தயாராக ஏதுவாக விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும், பள்ளிகளுக்கும் நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க வேண்டும்.


வாக்குச்சாவடிகள்: ஏனெனில், புதன்கிழமை மாலை வரை பள்ளிகள் மற்றும் மதிப்பீட்டு முகாம்களிலும் பணிபுரிந்துவிட்டு,

TEACHERS NEWS
அதன்பின் வீட்டுக்கு சென்று மறுநாள் வாக்குச்சாவடி முகாம்களுக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை அவசரகதியில் எடுத்து வைக்க வேண்டியசூழல் உள்ளது. எனவே, பதற்றமான மனநிலையில் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதை தவிர்க்கும் விதமாக விடுமுறை வழங்க வேண்டும். இது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459