இன்டர்நெட் வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப்பில் இப்படியொரு வசதியா ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/04/2024

இன்டர்நெட் வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப்பில் இப்படியொரு வசதியா ?

அதாவது, இந்த சேவையானது, இதுவரை ஷேர் செயலிகளில் செயல்பட்ட தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் பரிமாறப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, பயனரிடம் இன்டெர்நெட் இல்லாவிட்டாலும், இந்த புதிய வசதியை வைத்து அவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ளலாம். விரைவில்இது புகைப்படம், விடியோ, இசை, ஆவணங்கள், கோப்புகள் என எதையும் பகிரும் வகையில் கொண்டுவரப்படவிருக்கிறது. இந்த வசதியும், இரு தரப்பினரும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் வகையிலும், இதில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படாத வகையில்தான் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதாம். இது குறித்து வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், இது அருகிலிருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே பகிர முடியும். ஆன்டிராய்டு வசதிகொண்ட செல்போன்களில் முதல்கட்டமாக சோதிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த வசதி வேண்டுமென்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459