மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2024

மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா?

 1232433

மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்க மாட்டாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யாரும் வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


பண்டிகைகள், கொண்டாட்டங்களின் போது பெண்கள் மெகந்தி அல்லது மருதாணி போடுவது வழக்கமாக உள்ளது. சில சமூகங்களில் ஆண்களும் மருதாணி இடுகின்றனர். இந்நிலையில், மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற தகவல் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவியது.


குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல வாக்காளர்களுக்கும் இந்த தகவல் பரவியதால், வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள், ரசாயனங்களை கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், இதுகுறித்து, சென்னை தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது,‘‘ இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி.


குறிப்பிட்ட சில சமூகத்தினர் திருமண நிகழ்வுகளின் போது அதிகளவில் மெகந்தி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டு மானாலும் வாக்களிக்கலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459