தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI): முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு அபராதம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/04/2024

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI): முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு அபராதம்


1233668

தகவல் அறியும் உரிமை் சட்டத்தில்முறையாக தகவல் அளிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவில்பட்டி அருகேயுள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வுபெற்ற அரசு நில அளவையர். இவரது தந்தை சுப்பையா பெயரில் அய்யநேரி ஊராட்சிக்கு உட்பட்ட சுபா நகரில் உள்ள நிலம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.


நீதிமன்ற வழக்குக்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், தனது தந்தையின் நிலம் தொடர்பாக2020 டிச 7-ம் தேதி தகவல் அறியும்உரிமை சட்டத்தின்கீழ், சில தகவல்களைத் தருமாறு குருசாமி, மாவட்ட ப்பதிவாளரிடம் விண்ணப்பித்தார்.


குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, கோவில்பட்டி சார் பதிவாளருக்கு, மாவட்டப் பதிவாளர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அப்போது கோவில்பட்டி சார் பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள்விகளுக்கு,


மாறுபட்ட பதிலைத் தந்ததால், அவர் மாவட்டப் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்தார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து, 2021 ஏப். 12-ம் தேதி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் குருசாமி புகார் செய்தார்.


வசூலிக்க உத்தரவு: இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையம், குருசாமிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில்பட்டி சார் பதிவாளரும், பொதுதகவல் அலுவலருமான பாஸ்கரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும், அந்த தொகையை பாஸ்கரனிடம் வசூலித்து குருசாமியிடம் கொடுக்கும்படி தற்போதைய சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459