தேர்தல் பணி - ஆசிரியர்களின் தொடர் மரணம்...யார் பொறுப்பு? - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/04/2024

தேர்தல் பணி - ஆசிரியர்களின் தொடர் மரணம்...யார் பொறுப்பு?

 IMG-20240420-WA0017

வருந்துகிறோம்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்பகனூர், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை  தளவாய்பட்டி பிரிவு ரோடு அருகில்

TEACHERS NEWS
இன்று (19.04.2024) வெள்ளி காலை 5.30 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் கிராமம் கணேசபுரம்  முகவரியைச் சார்ந்த 

வெங்கடசுப்பிரமணியம் மகன் *ஜான் பிரகாஷ்* (வயது 39) மற்றும் அவரது  மனைவி *சில்வியா கேத்தரின் அனிதா* (வயது 35, *ஆசிரியை, R.C.பள்ளி, ஆத்தூர்*) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் தேர்தல் பணிக்காக ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது நாய் குறுக்கே வந்ததால் வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் ஜான் பிரகாஷ் என்பவருக்கு தலையிலும், சில்வியா கேத்தரின் அனிதா என்பவருக்கு கையிலும்  பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் கணவர் *ஜான் பிரகாஷ்* என்பவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்து போன ஜான் பிரகாஷ் பிரேதம் ஆத்தூர்  அரசு மருத்துவமனையில் உள்ளது. காயம் அடைந்த சில்வியா கேத்தரின் அனிதா என்பவர் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


IMG-20240420-WA0018

அரசு உயர்நிலைப்பள்ளி (இராமலிங்கபுரம்) பட்டதாரி ஆசிரியர் தி.செல்வராஜ் அவர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரகனூரில் தேர்தல் பணி முடித்து வீடு திரும்பும்போது சுமார் இரண்டரை மணி அளவில் விபத்தில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தாங்க இயலா மனதுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்


IMG_20240420_110642

வருந்துகிறோம்...


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், காமலாபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி தலைமையாசிரியர்

திரு D.V.கணேசன்

அவர்கள் தேர்தல் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 20.04.2024 சனிக்கிழமை அதிகாலை 5-15 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது?

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459