இதுதொடர்பாக ஆசிரியர், பெற்றோர்களுக்கு உரிய வழிகாட்டுதலும் வழங்கப்பட்டன. இதன்மூலம் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பள்ளிகளில் 3 லட்சம் பேருக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இது பள்ளிக் கல்வித்துறைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், பெற்றோர்கள் கவலையில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் தான். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 ஆயிரம் இடங்களுக்கு மேல் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
இந்த சூழலில் சென்னையை சேர்ந்த பெற்றோர்கள் சிலரிடம் விசாரிக்கையில், சில அரசு பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை. நாங்களும் மூன்று, நான்கு பள்ளிகளில் சென்று பார்த்தோம். இதனால் எந்தப் பள்ளியில் சேர்ப்பது என குழப்பமாக இருந்தது. ஒரு வழியாக முடிவெடுத்து சற்று தூரத்தில் இருந்த பள்ளியில் சேர்த்து விட்டோம் என்றனர். மேலும் சிலர் பேசுகையில், அரசு பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கல்வித் தரம் உயர்வு
கல்வித் தரம் உயர்வு
தொழில்நுட்ப அறிவு, ஆங்கில மொழியில் சரளமாக பேசும் பயிற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
முதலில் இந்த விஷயத்தை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பள்ளிக் கல்வித்துறையின் இலக்குகளை நோக்கி நகர்வதில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
பெற்றோர்கள் முடிவில் மாற்றம்
ஏனெனில் சில ஆசிரியர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்க வேண்டிய தேவை நிலவுகிறது. இதுதவிர நிர்வாக ரீதியில் சில பணிகளும் வழங்கப்படுகின்றன. எனவே இது கல்வியின் தரத்தை பாதிக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.
இப்படியான நிலைமை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணத்தை மாற்றிவிடும் என எச்சரித்தார். இதற்கு தீர்வு காணும் வகையில் வரும் கல்வியாண்டில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இப்படியான நிலைமை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணத்தை மாற்றிவிடும் என எச்சரித்தார். இதற்கு தீர்வு காணும் வகையில் வரும் கல்வியாண்டில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Source: சமயம்
No comments:
Post a Comment