மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. ஒரு பெரிய தொகையை வழங்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த தேர்தலுக்கு பின், அகவிலைப்படி பாக்கியை விடுவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அரசு வெளியிடவில்லை என்றாலும் இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை விரைவில் டெபாசிட் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது நடந்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப் பெரிய பரிசாக இருக்கும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சமயத்தில் தான் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையை மோடி அரசு வழங்கவில்லை.
அதன்பிறகு, அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பதிலும் இல்லை. இப்போது தேர்தல் சமயத்தில் இது தொடர்பாக ஒரு பெரிய முடிவை மத்திய அரசு எடுக்கலாம்.
அகவிலைப்படி உயர்வை கூட சுதந்திர தின உரையில் வெளியிட்டு மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே விரோதத்தை ஏற்படுத்திய உங்களுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓட்டு கண்டிப்பாக கிடைக்காது நீங்கள் கூறும் பொய்களை நம்பும் காலம் முடிந்து போய்விட்டது
ReplyDelete