Artificial Pancreas (செயற்கை கணையம்): சர்க்கரை நோயாளிகளுக்கான புது கண்டுபிடிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/04/2024

Artificial Pancreas (செயற்கை கணையம்): சர்க்கரை நோயாளிகளுக்கான புது கண்டுபிடிப்பு!

 


 டைப் 1  நீரிழிவு நோய் பாதிப்பில் கணையத்தால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாது அல்லது மிகக் குறைவான அளவே இன்சுலினை உற்பத்தி செய்ய இயலும். இதனால் பலரும் இன்சுலின் இன்ஜெக்ஷனை எடுத்துக் கொள்கின்றனர். 


டைப் 1 நீரிழிவு நோய் என்பது உலகளவில் வளர்ந்து வரும் ஒரு பிரச்னையாகவே உள்ளது. இந்தநிலையில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில் ‘செயற்கை கணைய கருவி (Artificial pancreas) வடிவமைக்கப்பட்டுள்ளது. 


NHS திட்டம் 

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) மூலம் உலகின் முதல் செயற்கை கணைய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் பைலட் திட்டமாக டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 835 பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பரவலாகச் செயற்கை கணையம் பயன்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.  

Artificial Pancreas செயல்பாடு

இந்த கருவி ஒரு நபரின் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணிக்கிறது. தேவையான இன்சுலின் அளவீடுகள் கணக்கிடப்பட்டு, ஒரு பம்பிற்கு அனுப்பப்படுகின்றன.

நாளின் வெவ்வேறு இடங்களில் உங்களுக்குத் தேவையான இன்சுலினை விநியோகித்து, ரத்த ஓட்டத்தைச் சரிசெய்கிறது. இதனால் டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் இன்ஜெக்ஷனை செலுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. இந்த டெக்னாலஜியில் ஸ்மார்ட்போன் ஆப்பானது சென்சாருடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டுள்ளது.


Artificial Pancreas யாருக்கு பயன்படும்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு ஏப்ரல் 2 முதல் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பயனடையக்கூடிய நோயாளிகளை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளது.


இதற்காக உள்ளூர் சுகாதார அமைப்புகளுக்கு 2.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.26,18,81,500) ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போது இங்கிலாந்தில் 2,69,095 பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459