AI மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு வினாத்தாள் தயாரிக்கலாம் : உயர்நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/04/2024

AI மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு வினாத்தாள் தயாரிக்கலாம் : உயர்நீதிமன்றம்

ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர். இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459