மேற்கு வங்கத்தில், பள்ளி ஆசிரியர்கள் ஆள்சேர்ப்பு முறைகேடு வழக்கில், பணி நியமன ஆணையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்திருக்கிறது. முன்னதாக, 2016-ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24,640 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்களுக்கு மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம் மாநில அளவிலான தேர்வு நடத்தியது. இதில், சுமார் 23 லட்சம் தேர்வெழுதினர். பணிநீக்கம் ஆனால் இறுதியில், அறிவிக்கப்பட்ட 24,640 காலிப் பணியிடங்களை விடவும் சுமார் 1,000 பணியிடங்கள் அதிகமாக 25,753 நியமனக் கடிதங்கள் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக, 2016-ல் மாநிலக் கல்வியமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை கடந்த 2022 ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதோடு, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.50 கோடி கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஆசிரியர்கள் பணிநியமன ஆணையை ரத்து செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டெபாங்சு பாசக், எம்.டி ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமர்வு, 2016-ம் ஆண்டு ஆசிரியர்கள் பணி நியமன ஆணையை முழுவதுமாக ரத்து செய்து அதிரடி தீர்ப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கொல்கத்தா உயர் நீதிமன்றம் இதன் மூலம், அன்று பணியமர்த்தப்பட்ட 25,753 பேரும் தங்களின் வேலையை இழக்கக்கூடும் . மேலும் இந்த தீர்ப்பில், என்றும், அதற்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு அதோடு, நியமன செயல்முறை தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு
TEACHERS NEWS |
இந்தத் தீர்ப்பின்போது நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே காத்திருந்த பலரில் ஒருவர், `இந்த நாளுக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம். பல ஆண்டுகளாக வீதியில் இறங்கிய போராட்டத்துக்குப் பிறகு, இறுதியாக நீதி வழங்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment